உள்ளூர் செய்திகள்

கோவிலில் திரண்டிருந்த பக்தர்களை படத்தில் காணலாம்.


அச்சன்கோவில் தர்மசாஸ்தா மகோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Published On 2022-12-18 09:02 GMT   |   Update On 2022-12-18 09:02 GMT
  • அச்சன்கோவில் தர்மசாஸ்தாகோவிலில் ஆண்டுதோறும் மகோற்சவ திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
  • இந்த ஆண்டிற்கான மகோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

செங்கோட்டை:

தமிழ்நாடு - கேரள மாநில எல்லையில் அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அய்யப்பன் அரசராக இருந்து மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மகோற்சவ திருவிழா 10 நாட்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதில் இரு மாநிலத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு அய்யப்பனை தரிசனம் செய்வார்கள்.

இந்த ஆண்டிற்கான மகோற்சவ திருவிழா செண்டை மேளம் முழங்க வானவேடிக்கையுடன் கொடியேற்றப்பட்டு தொடங்கியது. இதில் தமிழகம், கேரள மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து இன்று முதல் 4 நாட்கள் திருவிழாக்களில் உற்சவபலி பூஜை, 7,8-ம் திருநாள் விழாக்களில் கருப்பன் துள்ளல், 9-ம் திருவிழா அன்று தேரோட்டம், 10-ம் திருவிழா நாளன்று சுவாமிக்கு ஆராட்டு திருவிழா மற்றும் 27-ந் தேதி அன்று மண்டல பூஜை என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சியுடன் 12 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் மாலை பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

Tags:    

Similar News