தருமபுரியில் டாக்டரின் பைக்கை திருடிய 2 பேர் சிறையில் அடைப்பு
- திருட்டு நடைபெற்ற பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் பார்வையிட்டனர்.
- திருடிய ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் சிவதர்ஷினி (வயது23). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ஸ்கூட்டரை அரசு ஆஸ்பத்தி ரியில் உள்ள பிரசவ வார்டு அருகே நிறுத்தி விட்டு பணிக்கு சென்றார்.
பணியை முடித்துவிட்டு மீண்டும் திரும்பி வந்தபோது அவருடைய ஸ்கூட்டர் மாயமாகி இருந்தது. மர்ம நபர்கள் அவருடைய ஸ்கூட்டரை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிவ தர்ஷினி இது பற்றி தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்்பெக்டர் விஜய சங்கர் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
திருட்டு நடைபெற்ற பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் பார்வையிட்டனர்.
அப்போது வேலூரைச் சேர்ந்த ஷகில் (36), வாணியம் பாடியை சேர்ந்த அஸ்கர் அலி (27) ஆகியோர் அந்த ஸ்கூட்டரை திருடி இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் இந்த 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் திருடிய ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.