உள்ளூர் செய்திகள்

பால்குட ஊர்வலம் நடந்த காட்சி.


ஆறுமுகநேரி அருகே அம்மன் கோவிலில் பக்தர்கள் பால்குட ஊர்வலம்

Published On 2022-09-01 09:38 GMT   |   Update On 2022-09-01 09:38 GMT
  • ஆறுமுகநேரி பூவரசூர் ஆதிபிராமணி பொடிப்பிள்ளை அம்மன், இலங்கத்தம்மன் கோவில் கொடை விழா 6 நாட்கள் நடைபெற்றது.
  • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது.

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி பூவரசூர் ஆதிபிராமணி பொடிப்பிள்ளை அம்மன், இலங்கத்தம்மன் கோவில் கொடை விழா 6 நாட்கள் நடைபெற்றது.

முதல் நாள் காலையில் ஸ்ரீ மகா கணபதி ஹோமமும் இரவில் திருவிளக்கு பூஜையும் நடந்தன. தினசரி இரவு வில்லிசை நடந்தது. 3-வது நாளன்று சுவாமி குடியழைப்பு பூஜை நடைபெற்றது.4-வது நாளன்று சுவாமிகள் மஞ்சள் நீராடி கடலுக்கு சென்று கும்பம் எடுத்து வருதல் நடந்தது. 5- வது திருநாளன்று காலையில் ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து மெயின் பஜார் வழியாக பவனி வந்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை சக்திவேல், சித்திரை பாண்டி, சக்தி, சேகர் ஆகியோர் செய்திருந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. பின்னர் மாலையில் சுவாமிகள் மஞ்சள் நீராடி ஆற்றுக்கு சென்று கும்ப வீதி உலா நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் மாவிளக்கு பெட்டி, ஆயிரங்கண்பானை மற்றும் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நிறைவு நாளன்று இரவு சுவாமிகள் மஞ்சள் நீராடி கும்ப வீதி உலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

நிகழ்ச்சிகளில் மாரிமுத்து, செல்வம், சாமி கண்ணு, பார்த்திபன், மணி, செல்வமுருகன், சோமு, வெங்கடேசன், கண்ணன், ராகவன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சிவசக்திவேல் உள்பட பலர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News