உள்ளூர் செய்திகள்

குப்பை மேடாக காட்சி தரும் குலசேகரன்பட்டினம் பகுதி.


குலசேகரன்பட்டினத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் -பக்தர்கள் கோரிக்கை

Published On 2022-10-16 09:24 GMT   |   Update On 2022-10-16 09:24 GMT
  • முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழா கடந்த 6-ந்தேதி நிறைவு பெற்றது.
  • குப்பை குளங்களை அப்புறப்படுத்துவதில் ஊராட்சிமன்றம் சுறுசுறுப்பு இல்லாமல் இருப்பதாக பக்தர்கள் குமுறுகின்றனர்

உடன்குடி:

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றியத்திற்குட்பட்ட குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழா கடந்த 6-ந்தேதி நிறைவு பெற்றது. 11 நாள் நடந்த விழாவில் பல லட்சம் பக்தர்கள் கோவில் வளாகம், கடற்கரை மற்றும் குலசேகரன்பட்டினம் ஊராட்சி மன்ற பகுதி முழுவதும் முகாமிட்டு தசரா திருவிழா கோலங்காலமாக நடந்தது.

அப்போது ஏராளமான குப்பை குளங்கள் குவிந்தன. குப்பை குளங்களை அப்புறப்படுத்துவதில் குலசேகரன்பட்டினம் ஊராட்சிமன்றம் சுறுசுறுப்பு இல்லாமல் இருப்பதாக பக்தர்கள் குமுறுகின்றனர்.

கோயில் முன்பு கடற்கரை வளாகம் ஆகிய பகுதியில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது இவைகளை உடனடியாக அப்புறப்படுத்த கூடுதல் பணியாளர்கள் நியமி த்து பணி செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

Similar News