உள்ளூர் செய்திகள்

அம்மனிடன் உத்தரவு கேட்க ஊர்வலமாக பக்தர்கள் செல்வதையும், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பதையும் படத்தில் காணலாம்.

வாழப்பாடி திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடத்த அம்மனிடம் சகுனம் கேட்ட பக்தர்கள்

Published On 2023-03-14 13:27 IST   |   Update On 2023-03-14 13:27:00 IST
  • கோவில்கள் வண்ணம் திட்டி புதுப்பிக்கப் பட்டு கும்பாபிஷேக விழா நடத்திட முடிவு
  • தீமிதித் திருவிழா நடத்து வதற்கு அம்மன் உத்தரவு கொடுக்க வேண்டி சிறப்பு பூஜை வழிபாடு

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பழமை யான மாரியம்மன் மற்றும் திரவுபதி அம்மன் கோவில்கள் அமைந்துள் ளன.இக்கோவில்கள் வண்ணம் திட்டி புதுப்பிக்கப் பட்டு கும்பாபிஷேக விழா நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அக்ரஹாரம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதித் திருவிழா நடத்திட ஊர் பெரியதனக்காரருக்கு, இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து, நேற்று மாலை வாழப்பாடி மாரியம்மன் சன்னதியில் கூடிய ஊர் பெரிய தனக்கா ரர்கள் மற்றும் பொதுமக்கள், மேள வாத்திய முழங்க, தாம்பூல தட்டுகளுடன் திரவுபதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.

தீமிதித் திருவிழா நடத்து வதற்கு அம்மன் உத்தரவு கொடுக்க வேண்டி சிறப்பு பூஜை வழிபாடு நடத்தினர்.

கோவில் மண்டபத்தில் அமர்ந்து குபேர மூலையில் பல்லி சத்தமிட்டால் நல்ல சகுனம் என கருதி வேண்டிக் கொண்டனர். பொதுமக்கள் அமைதியாக அமர்ந்த ஒரு சில நிமிடங்களில் எதிர்பார்த்த குபேர மூலையில் இருந்து பள்ளி பலமாக சத்தமிட்டது.

இதனால், தீமிதித் திரு விழா நடத்துவதற்கு திரவு பதி அம்மன் உத்தரவு கொடுத்து விட்டதாக பக்தர்கள் பரவசம் அடைந்த னர். இதை தொடர்ந்து வாண வேடிக்கை நடத்தி மிகுந்த ஆரவாரத்தோடு, திருவிழா நடத்தப்படும் என அறிவித்தனர்.

அதன் தொடர்ச்சியாக தீ மிதி விழா ஏற்பாடுகல் மும்முர மாக நடைபெற்று வருகிறது. 

Tags:    

Similar News