உள்ளூர் செய்திகள்

கலெக்டர் மகாபாரதி. 

மயிலாடுதுறை, குத்தாலம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள்-கலெக்டர் ஆய்வு

Published On 2023-02-08 09:24 GMT   |   Update On 2023-02-08 09:24 GMT
  • ரூ.6 இலட்சம் செலவில் புதிய நெற்களம் அமைக்கும் பணியினை கலெக்டர் ஆய்வு செய்தார்.
  • நெற்களத்திற்கு வாகனம் செல்ல சாலை அமைத்துத்தர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றியம் ஆலங்குடியில் ரூ.54.36 லட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தி ற்குட்பட்ட ஆலங்குடி கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.1.67 லட்சம் செலவில் கங்காரு தேங்காய் விதைப்பண்ணை நிலையத்தையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6 இலட்சம் செலவில் புதிய நெற்களம் அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, உடனடியாக நெற்களத்திற்கு வாகனம் செல்ல சாலை அமைத்துத்தர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து, பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6.33 லட்சம் செலவில் பள்ளி உட் கட்டமைப்பு செய்யும் பணியினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3.84 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் செலவில் வீடு கட்டப்பட்டு வரும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும், துரிதமாகவும், தரமாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, மாவட்ட ஆட்சித்தலைவர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ரமேஷ்குமார், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் பிரேம்குமார், குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஜேந்திரன் சுமதி, ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர்கவிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News