உள்ளூர் செய்திகள்
எடப்பாடி அருகே 500 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு
- கோணமோரி வனப்பகுதி மற்றும் அதனை ஒட்டிய சிறு சிறு குன்றுகளின் அருகில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- பாறை இடுக்குகளில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த சாராய ஊறல் பேரல்களை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்துள்ள கோணமோரி வனப்பகுதி மற்றும் அதனை ஒட்டிய சிறு சிறு குன்றுகளின் அருகில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீஸ்காரர்கள் முருகன், செல்வகுமார், சந்திரகாந்த் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பாறை இடுக்குகளில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த சாராய ஊறல் பேரல்களை போலீசார் கைப்பற்றி அழித்தனர். அவை 500 லிட்டர் இருக்கும் என கூறப்படுகிறது. இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.