உள்ளூர் செய்திகள்

கயத்தாறு அருகே விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி

Published On 2023-09-20 14:43 IST   |   Update On 2023-09-20 14:43:00 IST
  • இளநிலை வேளாண்மை மாணவ- மாணவிகள் இணைந்து அசோலா வளர்ப்பு செயல் விளக்க பயிற்சி கயத்தாறு வட்டம் கம்மாபட்டி கிராமத்தில் நடத்தினர்.
  • தொடர்ந்து கிராம தங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக செயல் விளக்கம் மேற்கொண்டு கிராம மக்கள் எளிய முறையில் வளர்த்து லாபம் பெற ஊக்குவித்தனர்.

தூத்துக்குடி:

தூத்துகுடி மாவட்டம் ஸ்காட் வேளாண் அறிவியல் மையம் மற்றும் காருண்யா பல்கலைகழக 4-ம் ஆண்டு இளநிலை வேளாண்மை மாணவ- மாணவிகள் இணைந்து அசோலா வளர்ப்பு செயல் விளக்க பயிற்சி கயத்தார் வட்டம் கம்மாபட்டி கிராமத்தில் நடத்தினர்.

முதுநிலை விஞ்ஞானியும், ஸ்காட் வேளாண் அறிவியல் மையம் தலைவரமான பழனிச்சாமி தலைமை தாங்கினார். இதில் நிலைய தொழில்நுட்ப வல்லுநர்கள் முருகன், முத்துகுமார், வேல்முருகன், மாசாணச்செல்வம், கால்நடை மருத்துவர் ஆனந்த் மற்றும் பண்ணை மேலாளர் தாமோதரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் ஏராளமான கிராமமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மேலும் மாணவ -மாணவிகள் ஆல்ட்ரின், அய்யப்பன், அலோசியா, கார்த்திகா, கீர்த்தனா, ஹரினி ஆகியோர் அசோலா- கால்நடைகளுக்கு அதிக சத்துள்ள தீவனம் என கூறி அதன் பயன்களை எடுத்துரைத்தனர். தொடர்ந்து கிராம தங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக செயல் விளக்கம் மேற்கொண்டு கிராம மக்கள் எளிய முறையில் வளர்த்து லாபம் பெற ஊக்குவித்தனர்.

Tags:    

Similar News