உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவிலில் மக்கள் தேசம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

Published On 2023-08-05 14:20 IST   |   Update On 2023-08-05 14:20:00 IST
  • மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் தம்பி சேவியர் தலைமை தாங்கினார்.
  • ஆர்ப்பாட்டத்தின் போது மணிப்பூர் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் தேரடி திடலில் தென்காசி வடக்கு மாவட்ட மக்கள் தேசம் கட்சி சார்பில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட மக்கள் தேசம் கட்சி மாவட்ட செயலாளர் தம்பி சேவியர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மூனார் முருகன், தென்காசி தெற்கு மாவட்ட மக்கள் தேச கட்சி மாவட்ட தலைவர் இசக்கிமுத்து, செயலாளர் ராஜாராம், ஆகியோர் முன்னிலை வகித்தார். கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை மாவட்ட செயலாளர் சுபாஷ் வரவேற்று பேசினார்.

தென்காசி வடக்கு மாவட்ட பொருளாளர் பரமசிவன், எஸ்.டி.பி.ஐ. கட்சி நகர தலைவர் அப்துல் நசீர், நகர் மன்ற உறுப்பினர் ஷேக் முகமது, மக்கள் தேச கட்சி தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ராஜாராம், தேவகுமாரி உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தின் போது மணிப்பூர் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், மாவட்ட துணைச்செயலாளர் கருப்பசாமி, கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை மாவட்ட துணைச் செயலாளர் கணேஷ், மாவட்ட பொருளாளர் சகாயம், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் டெய்சி ராணி, போஸ் பாண்டி, முத்துராஜா, கார்த்திக் விஜய், ஜான்சன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மாணவரணி செயலாளர் பிரின்ஸ் ரூபன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News