உள்ளூர் செய்திகள்

சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2022-11-07 15:45 IST   |   Update On 2022-11-07 15:45:00 IST
  • மருதத்தூர் கிராமத்தில் கடந்த 50 ஆண்டு காலமாக வசிக்கின்றனர்.
  • உடும்புகள் அதிகம் இரவு நேரத்தில் நடமாடுகின்றன.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மருதத்தூர் கிராமத்தில் கடந்த 50 ஆண்டு காலமாக 1வது வார்டில் வசிக்கும் அப்பகுதி மக்கள் எங்கள் பகுதியில் சாலை வசதி இல்லாமல் வசித்து வருவதாகவும் அப்பகுதியில் தெரு விளக்குகள் இது இவரை போட்டு தரவில்லை என புகார் எழுந்தது. இது தவிர சாலையோரம் உள்ள பகுதிகளில் பாம்புகள் , உடும்புகள் அதிகம் இரவு நேரத்தில் நடமாடுவதால் மிகுந்த அச்சத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள்.

சமீபத்தில் அத்த தெருவில் வசித்த ஒரு சிறுவனுக்கு பாம்பு கடித்து மிகவும் உயிருக்கு போராடி காப்பாற்றினோம். எனவே இது சம்பந்தமாக சாலை வசதி தேவை எனக் கூறி பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் ஊராட்சி நிர்வாகம் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என கூறி 1வது வார்டில் சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பள்ளி சிறுவர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அங்கு வசிக்கும் மக்கள் கூறுகையில் எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் எங்கள் பகுதியில் சாலை வசதி செய்து தர வேண்டும், தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டும், குடிநீர் வசதி செய்து தர வேண்டும் இனியும் செய்து தர தாமதித்தால் விரைவில் திட்டக்குடி, விருத்தாச்சலம் மாநில சாலையில் மக்கள் ஒன்று திரண்டு நாங்கள்சாலை மறியலில் ஈடுபடுவோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News