உள்ளூர் செய்திகள்

திருவாரூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருவாரூரில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-21 14:42 IST   |   Update On 2023-07-21 14:42:00 IST
  • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.

திருவாரூர்:

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியதாக கூறி தி.மு.க. அரசை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே சந்திப்பு நிலையம் முகப்பு வாயிலில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியதாக கூறி தமிழக அரசை கண்டித்து அதிமுகவின் அமைப்புச் செயலாளரும் மாவட்டச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் பேசும்போது கூறியதாவது, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது போன்ற பொய்யா வாக்குறுதிகளை கொடுத்து திமுக ஆட்சியில் அமர்ந்துள்ளது. மேலும் பொருட்களின் விலைவாசி யையும் உயர்ந்து விட்டது.

தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.

கடைமடை வரை முறையாக நீர் பாயாததால் குறுவை சாகுபடி பொய்த்துள்ளது.

பயிர்கள் கருகி வருகின்றன.

குறுவை பொய்த்து விட்ட நிலையில் சம்பா சாகுபடியாவது நடை பெறுமா என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர்கள் சிவா.ராஜமாணிக்கம், டாக்டர் கோபால் உள்பட மாவட்ட நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர கிளைக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள் உள்பட ஏராளமான பெண்கள் பொதுமக்கள் ஆர்ப்பா ட்டத்தில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News