உள்ளூர் செய்திகள்
தருமபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
- சி.ஐ.டி.யு. விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ஜிவா தலைமை வகித்தார்.
தருமபுரி,
பழங்குடியின பெண்கள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்ட மதவாத கும்பலை கைது செய்ய வலியுறுத்தியும், மதவாத கும்பலின் வன்முறையை தடுக்க தவறிய மணிப்பூர் மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து சி.ஐ.டி.யு. விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ஜிவா தலைமை வகித்தார். மாநில செயலாளர் நாகராசன் , மாவட்ட துணைத்தலைவர் அங்கம்மாள், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழிலாளி சங்கத்தின் மாநில செயலாளர் முருகன் ஆகியோர் பேசினர்.