உள்ளூர் செய்திகள்

தெப்பக்காடு வளர்ப்பு முகாமில் மக்னா யானை உயிரிழப்பு

Published On 2023-10-15 14:08 IST   |   Update On 2023-10-15 14:08:00 IST
  • வயதுமுதிர்வு காரணமாக கடந்த ஆண்டு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டது
  • நேற்றிரவு மக்னா யானை பரிதாபமாக இறந்தது

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் பராமரிப்பு முகாமில் மூர்த்தி என்ற மக்னா யானை கடந்த 1998-ம்ஆண்டு முதல் பராமரிக்கப்பட்டு வந்தது. இது கும்கி யானையாகவும் செயல்பட்டது. இந்த நிலையில் மக்னா யானை வயது முதிர்வு காரணமாக கடந்த ஆண்டு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டது. அதற்கு தற்போது 58 வயது ஆனது.

இந்த நிலையில் உடல்நலம் குன்றி கடந்த ஓராண்டாக அவதிப்பட்டு வந்தது. எனவே முதுமலை கால்நடை டாக்டர்கள் குழுவினர் போதிய சிகிச்சை அளித்தனர். ஆனாலும் டாக்டர்களின் சிகிச்சை பலனின்றி மக்னா யானை நேற்றிரவு சுமார் 9 மணி அளவில் பரிதாபமாக இறந்து விட்டது.  

Tags:    

Similar News