உள்ளூர் செய்திகள்

மீன் வளர்ப்பு பண்ணையில் உள்ள குளத்தில் மீன்கள் இறந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

பண்ணை குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

Published On 2022-10-29 08:53 GMT   |   Update On 2022-10-29 08:53 GMT
  • மீன் குஞ்சுகளள் 3 டன் எடையுள்ளதாகவும், 5 லட்சம் மதிப்புள்ளதாகவும் இருக்கும்.
  • மர்ம நபர்கள் குளத்தில் விஷத்தை கலந்துள்ளார்களா?

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட எருக்காட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் அசோகன்.

இவர் திருவள்ளூர் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பதிவாளர்.

இவருக்கு அருகில் உள்ள பருத்தியூர் கிராமத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் மீன் பண்ணை அமைந்துள்ளது.

இதில் குளங்களை அமைத்து மீன் வளர்ப்பில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இந்தநிலையில் அசோகன் மீன் பண்ணைக்கு சென்று பார்த்தபோது சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள குளத்தில் வளர்க்கப்பட்ட கட்லா, ரோகு, மிருகுளா போன்ற மீன்கள் செத்து மிதந்துள்ளன.

இந்த குளத்தில் 5000? மீன் குஞ்சுகளை அவர் வளர்த்து வந்ததாகவும் அவை 3 டன் எடையுள்ளதாகவும் 5 லட்சம் மதிப்புள்ளதாகவும் இருக்கும் என்று கூறப்படு கிறது.

இது குறித்து அசோகன் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தி அந்த குளத்தில் மிதந்த மீன் மற்றும் தண்ணீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

ஆய்வுக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் மர்ம நபர்கள் இந்த குளத்தில் விஷத்தை கலந்துள்ளார்களா அல்லது வேறு ஏதும் காரணத்தினால் மீன்கள் இறந்தனவா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News