உள்ளூர் செய்திகள்

குலசேகரன்பட்டினம் தசரா பக்தர்கள் வசதிக்காக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

Published On 2023-09-12 09:02 GMT   |   Update On 2023-09-12 09:02 GMT
  • நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூ.20லட்சம் மதிப்பிலான 4 சென்ட் நிலத்தை 12 ஆண்டுகளுக்கு முன்னர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருந்தனர்.
  • தொடர்ந்து ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றினர்.

உடன்குடி:

குகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற அக்டோபர் 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது பல லட்சம் பக்தர்கள் கூடும் தசரா விழா விற்காக பல்வேறு பணிகள் தற்போது தொடங்கப்ப ட்டுள்ளது,

குலசேகரன்பட்டினத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூ.20லட்சம் மதிப்பிலான 4 சென்ட் நிலத்தை 12 ஆண்டு களுக்கு முன்னர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருந்தனர்.

இதுகுறித்து நெடு ஞ்சாலைத்துறை, பஞ்சாயத்து நிர்வாகம், வருவாய்த்துறை சார்பில் பல முறை நோட்டீஸ் கொடுத்தும் முறையான பதிலளிக்கப்பட வில்லை. இந்நிலையில் நெடுஞ்சாலை த்துறை சார்பில் ஆக்கிர மிப்புகள் அகற்று வதற்காக நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை ஊழியர்கள் வந்தனர். அப்போது வீடு கட்டி குடியிருந்த குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவே குலசேகரன்பட்டினம் போலீ சார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றினர். இதனையடுத்து பல ஆண்டுகளாக நெடுஞ்சா லைத்துறைக்கு சொந்தமாக ஆக்கிரமிப்பு இடம் மீட்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது, ஏராளமானபோலீசார் குவிக்கப்பட்டனர்.

நெடுஞ்சாலைத்துறை யினர் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் கூறும் போது பலலட்சம் கூடும்தசரா பக்தர்களுக்கு இடையூறாக பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் அதுவும் விரைவில் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

Tags:    

Similar News