உள்ளூர் செய்திகள்

சேதமடைந்த மின்கம்பம்

சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-09-04 15:25 IST   |   Update On 2022-09-04 15:25:00 IST
  • ஆலத்தூரில் இருந்து உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
  • எந்நேரத்திலும் மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேற்கண்ட பகுதிகளுக்கு ஆலத்தூரில் இருந்து உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.மேலும் மின்கம்பங்கள் குடிசை பகுதிகளுக்கு நடுவில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அம்பேத்கர் நகரில் உள்ள மின்கம்பம் ஒன்று சிமெண்ட் காரைகள் பெயர்ந்து சேதம் அடைந்துள்ளது. இதனால் எந்நேரத்திலும் மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்

இது குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் தெரிவித்தனர். எனவே உயிரிழப்பு ஏற்படும் முன் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News