உள்ளூர் செய்திகள்
வடபழனியில் வாகனம் நிறுத்தும் தகராறில் ஆட்டோ டிரைவருக்கு வெட்டு
- விருகம்பாக்கம், கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர்.
- வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போரூர்:
விருகம்பாக்கம், கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர்(35). ஆட்டோ டிரைவர். வட பழனி பஸ் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டான்டில் ஆட்டோவை நிறுத்தி ஓட்டிவந்தார். இவருக்கும் மற்றொரு ஆட்டோ டிரைவர் பரணி என்பவருக்கும் ஆட்டோ நிறுத்துவதில் தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு இது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பரணி நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் சேகரை வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சேகர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.