உள்ளூர் செய்திகள்

உமையாள்புரம் கிராமத்தில் பயிர் அறுவடை பரிசோதனை முகாம் நடைபெற்றபோது எடுத்த படம்.

பயிர் அறுவடை பரிசோதனை முகாம்

Published On 2022-12-20 13:19 IST   |   Update On 2022-12-20 13:19:00 IST
  • வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் புள்ளியில் துறை வாயிலாக பயிர் அறுவடை பரிசோதனை நடத்தப்படுகிறது.
  • விவசாயி இந்திராணி என்பவரது மக்காச்சோள வயலில், பயிர் அறுவடை பரிசோதனை முகாம் நடைபெற்றது.

வாழப்பாடி:

ஒவ்வொரு பயிரின் மகசூலையும், ஒவ்வொரு பருவத்திலும் நிர்ணயிக்கும் நோக்கில் எதேச்சை முறையில் தேர்வு செய்யப்படும் வயல்களில், வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் புள்ளியில் துறை வாயிலாக பயிர் அறுவடை பரிசோதனை நடத்தப்படுகிறது.

இதன்படி, சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரம் உமையாள்புரம் கிராமத்தில், விவசாயி இந்திராணி என்பவரது மக்காச்சோள வயலில், பயிர் அறுவடை பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இந்த பரிசோதனை முகாமில், புள்ளியியல் துறை மண்டல துணை இயக்குனர் பாலசுப்ரமணியன், உதவி இயக்குநர் பெரியசாமி, ஆய்வாளர் குணசீலன், வேளாண்மை உதவி இயக்குநர் வேல்முருகன், வேளாண்மை அலுவலர் தாமரைச் செல்வன், உதவி வேளாண்மை அலுவலர் முத்துவேல், கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், நல்லவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேபோல், ஏத்தாப்பூரில் முகாமிட்டு ஊரக திறன் பயிற்சி பெற்று வரும் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இளங்கலை மாணவர்கள் மற்றும் திருச்சி புனித ஜோசப் கல்லூரி புள்ளியியல் துறை மாணவர்களும் இந்த பரிசோதனை முகாமில் கலந்து கொண்டு களப்பயிற்சி பெற்றனர்.

Tags:    

Similar News