உள்ளூர் செய்திகள்

சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடித்து அடைப்பு

Published On 2023-10-07 09:13 GMT   |   Update On 2023-10-07 09:13 GMT
  • 14 மாடுகள் பிடித்து அடைக்கப்பட்டு வைக்கோல் ஆகியவை இடப்படுகிறது.
  • மாடுகளின் உரிமையாளர் மீது காவல்துறையில் வழக்குபதிவு செய்திட அறிவுறுத்தப்படும்.

சீர்காழி:

சீர்காழியில் பிரதான சாலைகள் உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளிலும் மாடுகள் சுற்றி திரிந்து வருகிறது.

இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுதோடு சில நேரங்களில் மாடுகள் திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால் விபத்துக்களும் ஏற்பட்டது.

சாலையில் சுற்றிதிரியும் மாடுகளை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன், நகராட்சி ஆணையர் ஹேமலதா ஆகியோர் உத்தரவின்படி நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளை பிடிக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.

இதுவரை சுமார் 14 மாடுகள் பிடிக்கப்பட்டு நகராட்சி குடிநீர் மேல்நிலைநீர் தேக்கதொட்டி அமைந்துள்ள வளாகத்தில் அடைக்கப்பட்டு வைக்கோல் ஆகியவை இடப்படுகிறது.

மாடுகளை மீட்கவரும் கால்நடை உரிமையாளர்களுக்கு ரூ .2ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்படும் எனவும் அடுத்தமுறை மீண்டும் மாடுகளை சாலையில் விடும் உரிமையாளர் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்திட அறிவுறு த்தப்படும் என நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் தெரிவித்தார்.

Tags:    

Similar News