உள்ளூர் செய்திகள்
பேரூராட்சி கூட்டத்தில் தலைவர் மணிமேகலை ஆனந்திடம் கவுன்சிலர் குமரேசன் மனுவை வழங்கியபோது எடுத்தபடம்.
தென்திருப்பேரை பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கவுன்சிலர் மனு
- தென்திருப்பேரை பேரூராட்சியில் முற்றிலும் பழுதடைந்து பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாத படித்துறைகள் கட்ட வேண்டும்.
- அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு பணியை விரைவில் சிறந்த முறையில் செய்து கொடுக்க வேண்டியும் கவுன்சிலர் குமரேசன் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தலைவர் மணிமேகலை ஆனந்திடம் மனு வழங்கினார்.
தென்திருப்பேரை:
தென்திருப்பேரை பேரூராட்சியில் முற்றிலும் பழுதடைந்து பல ஆண்டுகளாக போடப்படாத குண்டும் குழியுமான சாலைகள், புதுப்பிக்கப்படாத படித்துறைகள் மற்றும் புதிய படித்துறைகள் கட்ட வேண்டும். கடந்த 20 வருடங்களாக அடிப்படை கட்டமைப்பு வசதியில் மிகவும் பின்தங்கியுள்ள தென்திருப்பேரை பேரூராட்சியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு பணியை விரைவில் சிறந்த முறையில் செய்து கொடுக்க வேண்டியும் கவுன்சிலர் குமரேசன் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தலைவர் மணிமேகலை ஆனந்திடம் மனு வழங்கினார்.