உள்ளூர் செய்திகள்

பஸ்நிலைய கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட காட்சி.

நெல்லை புதிய பஸ்நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்த வியாபாரிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை

Published On 2023-03-31 09:37 GMT   |   Update On 2023-03-31 09:37 GMT
  • பயணிகள் வசதிக்காக பஸ்நிலையத்தில் கடைகளுக்கு முன்பாக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
  • பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகள் கடும் வெயிலும், மழையிலும் தவித்து வருகிறார்கள்.

நெல்லை:

நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட புதிய பஸ்நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதுப்பிக்கப்ப ட்டுள்ளது. கீழ்தளத்தில் பெரும்பாலான கடைகள் வாடகை அடிப்படையில் இயங்கி வருகிறது.

பயணிகள் வசதிக்காக பஸ்நிலையத்தில் கடைகளுக்கு முன்பாக நடை பாதை அமைக்கப்பட்டு ள்ளது. ஆனால் இந்த நடை பாதைகளில் பெரும்பாலான வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்து வருகிறார்கள்.

இதனால் பயணிகள் நடந்து செல்ல இடமின்றி அவதி அடைந்து வருகிறார்கள். மேலும் பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகள் கடும் வெயிலும், மழையிலும் தவித்து வருகிறார்கள்.

இதைத்தொடர்ந்து பஸ்நிலைய நடைபாதையில் ஆக்கிரமிப்பு செய்துள்ள வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பயணிகள் மாநகராட்சி அலுவலகத்தில் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின்பேரில் நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின் பேரில் இன்று மாநகராட்சி அதி காரிகள் பஸ்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சில வியாபாரிகள் ஆகிரமிப்பு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

உடனடியாக இன்றுக்குள் ஆக்ரமிப்புகள் அகற்ற வேண்டும் என்றும், இல்லையென்றால் வியாபாரிகள் மீது அபராதம் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் விதிமுறைகளை மீறி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய கடைகளில் இருந்து 16 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆய்வின் போது சுகாதார அலுவலர் அரசகுமார், சுகாதார ஆய்வாளர் முருகன், மேற்பார்வை யாளர்கள் ஆறுமுகம், முருகன், மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News