உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை

Published On 2022-10-07 09:47 GMT   |   Update On 2022-10-07 10:51 GMT
  • சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
  • ஒரு நாள் மழைக்கே பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.

செங்கல்பட்டு:

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தொடர்ந்து காலை வரை கனமழை பெய்தது.

வேண்பாக்கம், நத்தம், திம்மாவரம், சிங்கபெருமாள் கோவில், மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஒரு நாள் மழைக்கே பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு ரெயில் நிலைய வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.

Tags:    

Similar News