வடவள்ளி அருகே கட்டிட தொழிலாளி தற்கொலை
- சரவணகுமாரின் இதயத்தில் அடைப்பு இருப்பதாக தெரிவித்தனர்.
- வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை வடவள்ளி அருகே உள்ள சுண்டபாளையத்தை சேர்ந்தவர் சரவணகுமார்(வயது 45).கூலி தொழிலாளி. இவருக்கு இருதய பிரச்சனை இருந்து வந்தது. ஆஸ்பத்திரிக்கு சென்று செய்த பரிசோதனையில், அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதாகவும், ஆபரேஷன் செய்ய வேண்டும் எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த வடவள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
தொடர்ந்து அவர் தற்கொலை செய்ததற்கான காரணத்தை அறிய வீடு முழுவதும் சோதனையிட்டனர். அப்போது அங்கு, சரவணகுமார் இறப்பதற்கு முன்பு தான் கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில், என் சாவிற்கு யாரும் காரணம் இல்லை. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்த முடிவை எடுக்கிறேன் என எழுதப்பட்டிருந்தது.இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.