உள்ளூர் செய்திகள்

தஞ்சை ராஜவீதிகளில் மழைநீர் வடிகால் கட்டும் பணிகளை மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராஜவீதிகளில் மழைநீர் வடிகால் கட்டும் பணி- மேயர் ஆய்வு

Published On 2022-10-05 10:14 GMT   |   Update On 2022-10-05 10:14 GMT
  • வடிகால் வாய்க்காலை சிலர் முழுமையாக ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளனர்.
  • பைபர் மின்வயர்களை பூமிக்குள் புதைக்கும் திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சையில் தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதி, கீழ வீதிகளில் புதிய வடிகால் வாய்க்கால்கள் கட்டும் பணிகளை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

தஞ்சை நகரின் மையப்பகுதியான தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதி, கீழவீதி ஆகிய 4 வீதிகளிலும் ஆயிரக்கணக்கான கடைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள் உள்ளன.

4 வீதிகளிலும் மழை பெய்தால் நீர் வடிய இரு புறமும் வடிகால் வாய்க்கால் இருந்த நிலையில், சிலர் வாய்க்கால்களை முழுமையாக ஆக்கிரமித்து கட்டிடங்கள், வாசல் படிகள் உள்ளிட்ட கட்டிடங்களை கான்கிரீட்டால் கட்டி யதால் மழைநீர் வடிய வழியில்லாமல் சாலைகளிலேயே தண்ணீர் தேங்கி கிடந்தது.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலை துறையும், மாநகராட்சியும் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிய நிலையில் ரூ.12 கோடி செலவில் மீண்டும் புதிய மழைநீர் வடிகால்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பணிகள் நடைபெறும் போது கழிவு நீரினை சாலைகளில் விடாமல், குழாய் மூலம் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்ல அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மழைக் காலம் வருவதற்குள் வடிகால் வாய்க்கால் கட்டும் பணிகள் துரிதமாக்கப்பட்டு உள்ளது.

தேரோடும் 4 வீதிகளிலும் மின்கம்பங்களை அகற்றிவிட்டு, பைபர் மின்வயர்களை பூமிக்குள் புதைக்கும் திட்ட பணிகள் ரூ.16 கோடி நிதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் விரைவில் தொடங்கப்பட உள்ளது .

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி பொறியாளர் ஜெகதீசன், துணை பொறியாளர் கார்த்தி, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News