உள்ளூர் செய்திகள்

மின்சாரம் பாய்ந்து கட்டிட மேஸ்திரி பலிஉடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் -பரபரப்பு

Published On 2023-05-07 08:46 GMT   |   Update On 2023-05-07 08:46 GMT
  • காந்தி மகான் பகுதியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி முனியப்பன் இவருக்கு வளர்மதி என்ற மனைவியும் 7 மாத பெண் குழந்தை உள்ளது.
  • மின் கம்பியில் உயர் மின் அழுத்தம் காரணமாக திடீரென அறுந்து விழுந்தது. அப்போது அவ்வழியாக நடந்து சென்று கொண்டிருந்த கட்டிட மேஸ்திரி முனியப்பன் மீது விழுந்தது, இதில் முனியப்பன் தூக்கி வீசப்பட்டார்.

சேலம்:

சேலம் கிச்சிபாளையம் காந்தி மகான் பகுதியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி முனியப்பன் இவருக்கு வளர்மதி என்ற மனைவியும் 7 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் காந்தி மகான் தெரு பகுதியில் உள்ள மின் கம்பியில் உயர் மின் அழுத்தம் காரணமாக திடீரென அறுந்து விழுந்தது. அப்போது அவ்வழியாக நடந்து சென்று கொண்டிருந்த கட்டிட மேஸ்திரி முனியப்பன் மீது விழுந்தது, இதில் முனியப்பன் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்தநிலையில் கட்டிடம் மேஸ்திரி முனியப்பன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இன்று உடலை வாங்க மறுத்து திடீரென அரசு மருத்துவமனை வளாகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து உறவினர் கூறும்போது:-

கிச்சிபாளையம் பகுதியில் மின் பாதைகள் சரிவர இல்லை என்றும் அதனை பராமரிக்காமலேயே உள்ளது என்றும் இதனால் கட்டிடம் மேஸ்திரி உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்தனர். மின்சாரத் துறையின் அலட்சிய போக்கினாலே ஒரு உயிர் பறிபோய் விட்டது என்றும் உயிரிழந்த குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.1 கோடி நிவாரண நிதியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும். தமிழக அரசு வழங்காவிட்டால் உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்தனர்.

மேலும் உயிரிழந்த கட்டிடம் மேஸ்திரியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News