உள்ளூர் செய்திகள்

 கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றிய காட்சி.

உத்தனூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2023-08-20 15:04 IST   |   Update On 2023-08-20 15:04:00 IST
  • கடந்த மாதம் ஜூலை 17-ம் தேதி திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவானது மகா கணபதி பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
  • தாரை தப்பட்டை முழங்க அர்ச்ச கர்கள் கோவில் கலசத்திற்கு பூஜை செய்து புனித நீர் ஊற்றினர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், உங்கரான அள்ளி ஊராட்சியில் உள்ள பருத்தி நத்தம், உத்தனூர் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

கடந்த மாதம் ஜூலை 17-ம் தேதி திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவானது மகா கணபதி பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

அதனை தொடர்ந்து திருவிளக்கு வழிபாடு, சாமி சிலைகள் ஊர்வலம், முளைப்பாரி அழைத்து வருதல், யாகசாலை அலங்காரம், மற்றும் விக்னேஸ்வர பூஜை, திருவிளக்கு வழிபாடு, தீர்த்தக்குடம் புறப்படுதல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.

இதனையடுத்து இன்று காலை மண்டப அர்ச்சனை, லலிதா சஹஸ்ரநாமம் அர்ச்சனை, திரவிய ஹோமம், பூர்ணாஹீதி கலச புறப்பாடு போன்ற பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 10.30 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேக தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் தாரை தப்பட்டை முழங்க அர்ச்சகர்கள் கோவில் கலசத்திற்கு பூஜை செய்து புனித நீர் ஊற்றினர். இதில் தருமபுரி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் கோவில் அறங்காவலர் குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. 

Tags:    

Similar News