உள்ளூர் செய்திகள்
நெய்வேலியில் காங்கிரஸ் கட்சியினர் அறவழி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நெய்வேலியில் காங்கிரஸ் கட்சியினர் அறவழி போராட்டம்
- நெய்வேலியில் காங்கிரஸ் கட்சியினர் அறவழி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- ஐ.என்.டி.யு.சி. நிர்வாகி ரவிக்குமார், எஸ்.சி. எஸ்.டி பிரிவு தலைவர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெய்வேலி புதுநகர் மெயின் பஜார் காந்தி சிலை அருகில் ராகுல்காந்தி பதவி நீக்கம் செய்யபட்டதை கண்டித்து அறவழியில் சத்தியா கிரக போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு எம்.எல்.ஏ. எம்.ஆர்.ஆர். ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகர காங்கிரஸ் தலைவர் ஸ்டீபன் வரவேற்புரை ஆற்றினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் இளஞ்செழியன், முன்னாள் மாவட்ட தலைவர் பெரியசாமி, ஐ.என்.டி.யு.சி. நிர்வாகி ரவிக்குமார், எஸ்.சி. எஸ்.டி பிரிவு தலைவர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஐ.என்.டி.யு.சி அலுவலக செயலாளர் மைக்கேல் ரவி, பணி தலைவர் குமார் ஆகியோர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.