காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- ராகுல்காந்தியை தொடர் பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படும் மத்திய அரசின் போக்கினை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
- ராகுல்காந்தி மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், காங்., கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை தொடர் பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படும் மத்திய அரசின் போக்கினை கண்டித்து, மாவட்டம் முழுவதும் பல்வேறு கட்டங்களாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு கிழக்கு மாவட்டத் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்டத் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, காசிலிங்கம், நாஞ்சில் ஜேசு, மாவட்ட துணைத்தலைவர் சேகர், விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்து கண்டன உரை ஆற்றினர்.
மேலும் முற்றுகைப் போராட்டத்தில்,மத்திய அரசின் மக்கள் விரோதபோக்கை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதே போல ராகுல்காந்தி மீதான வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் நகர தலைவர்கள் லலித் ஆண்டனி, யுவராஜ், தேவநாராயணன், எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாநில பொறுப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, மாவட்ட செயலாளர்கள் ஹரி, சங்கர், ஜெயசீலன், சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.