உள்ளூர் செய்திகள்
பொதுமக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகள் வழங்கிய காட்சி.
ஆறுமுகநேரியில் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
- ஆறுமுகநேரியில் நகர காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
- நகர காங்கிரஸ் தலைவர் ராஜாமணி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
ஆறுமுகநேரி:
இமாச்சல பிரதேச தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை கொண்டாடும் விழா மற்றும் சோனியா காந்தி பிறந்த தின விழா ஆறுமுகநேரியில் நகர காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது. கட்சியின் மூத்த தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் வட்டார செயலாளர் அழகேசன், தூத்துக்குடி மாவட்ட செய லாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர காங்கிரஸ் தலைவர் ராஜாமணி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நகர துணை தலைவர்கள் சிவகணேசன், மூக்கன் கிறிஸ்டியான் நகரச் செய லாளர்கள் ராஜலிங்கம், நடராஜன், மகளிர் காங்கிரஸ் தலைவர் பெனிட் ராணி, முன்னாள் வார்டு கவுன்சிலர் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.