உள்ளூர் செய்திகள்
புதுவையில் இருந்து அரசு பஸ்சில் கடத்தப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்
- இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமை யிலான போலீசார் பஸ்சினை நிறுத்தினர்.
- டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
புதுவையில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு விரைவு பஸ் 40 பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்று இரவு புறப்பட்டு சென்றது. இந்தப் பஸ் திண்டிவனத்தை கடந்து செஞ்சி நோக்கி சென்றது. அப்போது செஞ்சி கூட்ரோடு அருகில் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமை யிலான போலீசார் பஸ்சினை நிறுத்தினர். உள்ளே சென்ற போலீ சார் பயணிகளின் பைகளை சோதனையிட்டனர். அப்போது, பஸ்சில் பயணிகளின் பொருட்கள் வைக்கும் இடத்தில் கேட்பாரற்று ஒரு பை இருந்தது. இதனை திறந்து போலீசார் சோதனையிட்டனர்.
அதில் 30 குவார்ட்டர் மதுபான பாட்டில்களும், 10 புல் மதுபாட்டில்களும் இருந்தது. இந்த பை யாருடையது என்று போலீசார் விசாரித்தனர். எங்களுடையது இல்லை என பயணிகள் அனைவரும் கூறினர். இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.