உள்ளூர் செய்திகள்
மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்
,மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்.
மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்
விருத்தாசலத்தில் மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்
கடலூர்:
விருத்தாசலம் அடுத்த கார்கூடல் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது கார்கூடல் ஆற்று பகுதியில் மர்ம நபர் திருட்டுத்தனமாக மாட்டு வண்டியில் மணல் திருடிக் கொண்டிருந்ததை பார்த்த போலீசார் அவரை பிடிக்க முயன்றனர். ஆனால் போலீசாரை பார்த்ததும் மாட்டு வண்டியை அங்கேயே விட்டுவிட்டு மர்ம நபர் தப்பி ஓடினார். மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை செய்ததில், மணல் திருடிய நபர் கோ.பொன்னேரி பகுதியை சேர்ந்த வீரமணி என்பது தெரிய வந்தது.
சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய வீரமணியை தேடி வருகின்றனர்.