உள்ளூர் செய்திகள்

மின் கட்டண உயர்வை கண்டித்து த.மா.கா.வினர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த காட்சி.

வணிக, தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வை கண்டித்துமாவட்ட கலெக்டரிடம் மனு த.மா.கா. சார்பில் வழங்கப்பட்டது

Published On 2023-06-13 07:02 GMT   |   Update On 2023-06-13 07:02 GMT
  • தமிழகத்தில் கடந்த ஆண்டு மின்சார கட்ட ணத்தை உயர்த்தியதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழக பொதுமக்களை பாதிக்கும் இந்த கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும்.

விழுப்புரம்:

விழுப்புரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மின்சார கட்டண உயர்வை கண்டித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. விழுப்புரம் மத்திய மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் தசரதன், ராஜே ந்திரன் தலைமையிலான காங்கிரசார் அளித்த மனுவில் கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த ஆண்டு மின்சார கட்ட ணத்தை உயர்த்தியதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மின்சார கட்டணத்தை உயர்த்தியிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கொரோனா தாக்கத்தில் இருந்து தற்போதுதான் மீண்டு வரும் நிலையில் வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மின்சார கட்டணம் உயர்த்த ப்பட்டதால் மீண்டும் பாதிப்படையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிப்படை வார்கள். எனவே தமிழக பொதுமக்களை பாதிக்கும் இந்த கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இதில் வடக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன், விழுப்புரம் நகரத் தலைவர் ஹரிபாபு, நிர்வாகிகள் ஜெயமூர்த்தி, வி. ஆர். பி. பள்ளி தாளாளர் சோழன், தண்டபாணி, சங்கர் பிரகாஷ்,கேபிள் பார்த்திபன், இசைமாறன், திருமலை ,செல்வ முத்துக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News