உள்ளூர் செய்திகள்

திட்டங்களை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க கிருஷ்ணகிரி கலெக்டர் உத்தரவு

Published On 2023-01-11 15:10 IST   |   Update On 2023-01-11 15:10:00 IST
  • ஊரக வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
  • ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர்களுக்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி அறிவுரை வழங்கினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். கூட்டத்தில் 2021-22-ம் நிதியாண்டில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக 10 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம், பிரதான் மந்திரி ஆதர்ஸ் கிராம் யோஜானா திட்டம், ஒருங்கிணைந்த பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், தன்னிறைவு திட்டம், நமக்கு நாமே திட்டம் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

மேலும் சமூக பொருளாதா மேம்பாட்டுத் திட்டம், ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் திட்டம், இருளர் மற்றும் மலைவாழ் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் மேம்பாடு செய்தல், தேசிய கிராம சுயாட்சி திட்டம் குறித்து ஆய்வு நடத்தினார்.

பின்னர், மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளான சாலை அமைக்கும் பணிகள், சிறு பாலங்கள் கட்டுமான பணிகள், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுமான பணிகள், குடிநீர் திட்ட பணிகள் போன்ற பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்களை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். மேலும், புதிய திட்ட பணிகளை விரைந்து தொடங்கிட வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர்களுக்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி அறிவுரை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் கூடுதல் கலெக்டரும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனருமான வந்தனா கார்க், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் மலர்விழி மற்றும் உதவி திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News