உள்ளூர் செய்திகள்

ரதி மன்மதன் கோவிலில் சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

ரதி மன்மதன் கோவிலில் காமன் பண்டிகை

Published On 2023-03-08 08:24 GMT   |   Update On 2023-03-08 08:24 GMT
  • வீமநாயகி அம்மன் கோவிலில் இருந்து பால்காவடிகள் எடுத்து வந்தனர்.
  • தமிழ் பாரம்பரிய நாடகமான வள்ளி திருமணம் வரலாற்று நாடகம் நடைபெற்றது.

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே கூப்புளிக்காடு கிராமத்தில் கேட்டவர்களுக்கு கேட்டவரம் தரும் ரதிமன்மத சுவாமி கோவிலில் காமன் பண்டிகை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு பக்தர்கள் காப்பு அணிந்து 13 நாட்கள் பூஜைகள் நடைபெற்று திருவிழா நடைபெற்றது.

காலை வீமநாயகி அம்மன் கோவிலில் இருந்து பால்காவடிகள் எடுத்து வந்தனர்.

தொடர்ந்து 2000-க்கும் மேற்பட்டவர்களுக்கு வடை, அப்பளம், பாயாசத்துடன் அறுசுவை அன்னதானம் நடைபெற்றது.

மாலையில் பேராவூரணி நீலகண்டபிள்ளையார் கோவிலிருந்து பூத்தட்டு ஊர்வலம் கூப்புளிக்காடு ரதி மன்மதன் கோவிலை வந்து சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

தொடர்ந்து மாவிளக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

இரவு தமிழ் பாரம்பரிய நாடகமான வள்ளி திருமணம் வரலாற்று நாடகம் நடைபெற்றது.

அதிகாலை ரதிமன்மதன் சுவாமி முக்கிய வீதிகளின் வழியாக வீதியுலா நடைபெற்றது.

இதையடுத்து காமன் தகனம் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை கூப்புளிக்காடு கிராமத்தினர், இளைஞர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News