உள்ளூர் செய்திகள்

மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி.

லஞ்ச புகார் எதிரொலி- மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் கமிஷனர் திடீர் ஆய்வு

Published On 2023-02-02 14:50 IST   |   Update On 2023-02-02 14:50:00 IST
  • நெல்லை மாநகராட்சியில் நெல்லை, பாளை, தச்சநல்லூர், மேலப்பாளையம் ஆகிய 4 மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
  • இந்த அலுவலகங்களில் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி அவ்வப்போது சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.

நெல்லை:

நெல்லை மாநகராட்சியில் நெல்லை, பாளை, தச்சநல்லூர், மேலப்பாளையம் ஆகிய 4 மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகங்களில் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி அவ்வப்போது சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.

இந்நிலையில் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் லஞ்ச புகார் எழுந்தது. இதுதொடர்பாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் இன்று கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி திடீரென ஆய்வு செய்தார். அப்போது அங்கு வருகை பதிவு, வரவு-செலவு கணக்கு உள்ளிட்ட பல்வேறு கோப்புகளை பார்வையிட்டார்.

மேலும் அங்குள்ள உதவி வருவாய் ஆய்வாளர் அறை, கிளர்க்குகள் அறை, வரிவசூல் செய்யும் இடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News