உள்ளூர் செய்திகள்

தொழிலாளர் நல நிதியை வருகிற 31-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும்

Published On 2022-12-27 15:01 IST   |   Update On 2022-12-27 15:01:00 IST
  • தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் சார்பில் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி கள் வழங்கப்படுகிறது.
  • ஆண்டுக்கு 30 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நலநிதி செலுத்த வேலை அளிப்பவர் கடமைப்பட்டவர்.

நாமக்கல்:

தொழிலாளர் நலத்துறை நாமக்கல் உதவி ஆணையர் நந்தன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் சார்பில் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி கள் வழங்கப்படுகிறது. தொழிலாளர் நல நிதி சட்டத்தின் படி தொழிற்சா லைகள், மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்கள், 5-க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் பணிபுரியும் கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் நிர்வாகங்கள் பங்களிப்பு தொகை செலுத்த வேண்டும்.

ஆண்டுக்கு 30 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நலநிதி செலுத்த வேலை அளிப்பவர் கடமைப்பட்டவர். எனவே 2022-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நலநிதி பங்குத் தொகை யினை வருகிற 31-ந் தேதிக்குள் செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், டி.எம்.எஸ் வளாகம் ,தேனாம்பேட்டை சென்னை என்ற முகவரிக்கு வங்கி வரவோலை அல்லது காசோலையாக அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News