உள்ளூர் செய்திகள்
- தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. படித்து வருகிறார்.
- தீர்த்தமலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்ப வர வில்லை.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் கோ.ஈச்சம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாது. இவரது மகள் அர்ச்சனா (வயது 19). இவர் தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தீர்த்தமலைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றார். ஆனால், மாலையில் நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வரவில்லை.
இதுகுறித்து மாது கம்பைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அர்ச்சனாவை தேடி வருகின்றனர்.