உள்ளூர் செய்திகள்

உணவு கண்காட்சியை கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டபோது எடுத்தபடம்.


தூத்துக்குடியில் உகந்த உணவு கண்காட்சி கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்

Published On 2022-08-13 09:51 GMT   |   Update On 2022-08-13 09:51 GMT
  • 75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் உணவு பாதுகாப்புத் துறை, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையத்துடன் இணைந்து உகந்த உணவு கண்காட்சியை நடத்தியது
  • இந்தியா முழுவதும் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் நாட்டில் 50 சதவீதம் வளர் இளம் பெண்களுக்கு ரத்தசோகை உள்ளதாக கூறுகிறார்கள்.

தூத்துக்குடி:

75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் உணவு பாதுகாப்புத் துறை, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையத்துடன் இணைந்து உகந்த உணவு கண்காட்சியை நடத்தியது. விழாவுக்கு தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

உணவு கண்காட்சியில் ஒவ்வொரு உணவிலும் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பதை விளக்கும் வகையில் இந்த கண்காட்சி அமைந்துள்ளது. இந்தியா முழுவதும் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் நாட்டில் 50 சதவீதம் வளர் இளம் பெண்களுக்கு ரத்தசோகை உள்ளதாக கூறுகிறார்கள்.

அவர்கள் பள்ளிக்கூடங்களில் மதிய உணவு சாப்பிட்டால் ரத்தசோகை சரியாகிவிடும். ஆகையால் மாணவ, மாணவிகள் மதிய உணவு சாப்பிட வேண்டும். பாரம்பரிய உணவுகள், ஒவ்வொரு உணவையும் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை மக்கள் பார்த்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

தொடர்ந்து டாக்டர் சிவராமன் கலந்து கொண்டு பேசினார். அங்கன்வாடி பணியாளர்களுக்கு உணவு போட்டிகளை செப் தாமு நடத்தினார். தமிழாசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில், சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. கண்காட்சியில், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள், மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்கள், பிரசித்தி பெற்ற உணவு வகைகளும் அதன் ஊட்டச்சத்து விவரங்களுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. 75 வகையான தோசையும் விற்பனை செய்யப்பட்டன.

முன்னதாக உகந்த உணவு குறித்த 7½கிலோ மீட்டர் தூர விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கி நடைபயணத்தை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

நடைபயணத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் அனைவரும் சுத்தமான, சுகாதாரமான, சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். உணவகங்ளில் பலகா ரங்கள் பொட்டலம் இடும் போது அச்சடிக்கப்பட்ட தாள்களில் பொட்டலம் இடுவதை தவிர்த்து, வாழை இலைகள் உள்ளிட்ட சுகாதாரமான பொருட்களில் பொட்டலமிட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், தாசில்தார் செல்வக்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News