விளாத்திகுளம் பகுதியில் தரிசு நில தொகுப்பினை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்த காட்சி.
விளாத்திகுளம் அருகே தரிசு நில தொகுப்பினை கலெக்டர் ஆய்வு
- தலைக்காட்டுபுரம் தரிசு நிலத்தொகுப்பில் இருந்த கருவேல மரங்கள் அகற்றப்பட்டு சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
- தற்போது 7 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி பயிரும், 24 ஏக்கரில் உளுந்தும் பயிரிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
விளாத்திகுளம் அருகே உள்ள தலைகாட்டுபுரம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2021-2022-ல் தரிசுநிலத் தொகுப்பினை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
விவசாயிகள் குழு
தலைக்காட்டுபுரம் தரிசு நிலத்ெதாகுப்பில் 32 ஏக்கர் பரப்பளவில் இருந்த தரிசு நிலத்தில் இருந்த கருவேல மரங்கள் அகற்றப்பட்டு சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தொகுப்பில் 16 விவசாயிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு 2 ஆழ்துளை கிணறு ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒரு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது.
சூரியஒளி சக்தியில் இயங்கும் மின்மோட்டார் அமைக்கப்பட்டு நுண்ணீர்பாசனம் மூலம் பழமரக்கன்றுகள் பயிரிடப்படும். தற்போது 7 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி பயிரும், 24 ஏக்கரில் உளுந்தும் பயிரிடப்பட்டுள்ளது.
பண்ணைக்குட்டைகள்
தொகுப்பில் அமைக்கப்பட்ட 2 பண்ணைக்குட்டைகள், தூர் வாரப்பட்ட ஊரணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற் கொள்ளப்பட்டுள்ளது.
தலைக்காட்டுபுரம் ஊராட்சியில் ஊராட்சி அலுவலகம், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, அங்கன்வாடி கட்டிடம் பணிகளை பழைய பள்ளி கட்டடம், பொது விநியோக கட்டிடம் ஆகியவற்றில் நடைபெறும் பணிகள் பார்வையிட்டு விரைந்து, பணிகளை முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள், செயற்பொறியாளர் கிளாட்சின் இஸ்ரேல், வேளாண்மை உதவி இயக்குனர் கீதா, தோட்ட க்கலை உதவி இயக்குனர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.