அரசூர் ஊராட்சி பகுதியில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்த போது எடுத்தபடம்.
அரசூர் ஊராட்சி பகுதியில் கலெக்டர் ஆய்வு
- கடக்குளம் பகுதியில் நடைபெறும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் கால்வாய் தூர் வாரும் பணிகளை கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டார்.
- அரசூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து குடிநீர் தேவை குறித்து பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் ஒன்றியம் அரசூர்ஊராட்சி பகுதிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அவர் அரசூர் பகுதியில் ஜே.ஜே.எம். குடிநீர் திட்ட பணிகள் குறித்து பார்வையிட்டார். அப்போது மக்களிடம் குடிநீர் வருகை குறித்து கேட்டு அறிந்தார்.
பின்னர் அவர் கடக்குளம் பகுதியில் நடைபெறும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் கால்வாய் தூர் வாரும் பணிகளை பார்வையிட்டார்.
பின்னர் அரசூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து குடிநீர் தேவை குறித்து பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார். பின்னர் அதிகாரிகளிடம் அனைத்து அண்ணா மறுமலர்ச்சித் திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஊராட்சி தலைவர் தலைமையில் ஆலோசித்து அனைத்து அரசு திட்டபணிகளும் பொதுமக்களுக்கு சென்று பயனடைய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அப்போது அவருடன் அரசூர் ஊராட்சி மன்ற தலைவர் தினேஷ் ராஜசிங், திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புகாரி, சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, ஒன்றிய ஆணையர் ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ் குமார், உதவி பொறியாளர்கள் அருணா, கீதா ,பணித்திட்ட மேற்பார்வையாளர்கள் ஜெய்சங்கர், பெத்தராஜ், ராஜேஷ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்பட்டத்தி உள்ளிட்ட அரசு அலுவலக பணியாளர்கள் இருந்தனர்.