உள்ளூர் செய்திகள்

மாணவிகளுடன் கலெக்டர் அருண் தம்புராஜ் கலந்துரையாடினார்.

அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடல்

Published On 2023-02-11 07:33 GMT   |   Update On 2023-02-11 10:28 GMT
  • பள்ளியில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் ஆய்வு.
  • பச்சை வால் நட்சத்திரம் குறித்த பள்ளி மாணவிகளுக்கான விண்வெளி விழிப்புணர்வு நிகழ்ச்சி.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.

பின்பு, சி.2002, இ.3 என பெயரிடப்பட்ட பச்சை வால் நட்சத்திரம் குறித்த பள்ளி மாணவிகளுக்கான விண்வெளி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

பின்னர், பள்ளி மாணவி நீலவேணி தான் வரைந்த கலெக்டர் அருண் தம்புராஜின் உருவப்படத்தை அவரிடம் வழங்கினார்.

ஆய்வின்போது நாகை முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, நேர்முக உதவியாளர் வைத்தியநாதன், வட்டாரக்கல்வி அலுவலர் ராஜமாணிக்கம், பள்ளி துணை ஆய்வர் ராமநாதன், தலைமையாசிரியர் ஸ்டெல்லா, ஜேனட் அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார் மற்றும் ராஜாராம், ஊராட்சி மன்ற தலைவர் பானுமதி சுப்பிரமணியன் உதவி தலைமை ஆசிரியர் பரஞ்சோதி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News