உள்ளூர் செய்திகள்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு பணிகளை மேற்கொண்ட போது எடுத்த படம்.

ஆறுமுகநேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு - நேர்த்தியான செயல்பாடுகளுக்காக பாராட்டு

Published On 2022-10-17 08:27 GMT   |   Update On 2022-10-17 08:27 GMT
  • கலெக்டர் செந்தில்ராஜ் அங்குள்ள பதிவேடுகள் மற்றும் அதனை பராமரித்தல் பற்றியும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் செயல்பாடு பற்றியும் ஆய்வு செய்தார்.
  • சுகாதார நிலையத்திற்கு கடந்த ஆண்டிற்கான மத்திய தேசிய தர நிர்ணய சான்றிதழையும் வழங்கினார்.

ஆறுமுகநேரி:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அப்போது அங்குள்ள பதிவேடுகள் மற்றும் அதனை பராமரித்தல் பற்றியும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் செயல்பாடு பற்றியும் ஆய்வு செய்தார்.

சிறந்த முறையில் செயல்பட்டதற்காக ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் டாக்டர் சீனிவாசன், சித்த மருத்துவ அலுவலர் நந்தினி, சுகாதார ஆய்வாளர்கள் இளங்கோ, மகராஜன் உள்ளிட்டோரை கலெக்டர் பாராட்டினார். அத்துடன் இந்த சுகாதார நிலையத்திற்கு கடந்த ஆண்டிற்கான மத்திய தேசிய தர நிர்ணய சான்றிதழையும் வழங்கினார்.

மேலும் தொழுநோயாளிகளுக்கான மருத்துவ முகாமையும் பார்வையிட்டு நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.

இந்த ஆய்வு பணியின் போது தூத்துக்குடி சுகாதார பணிகளின் துணை இயக்குநர் பொற்செல்வன், வட்டார மருத்துவ அலுவலர் மெர்வினோ, மாவட்ட நல கல்வியாளர் முத்துக்குமார், தொழுநோய் துணை இயக்குநர் யமுனா, மருத்துவ மேற்பார்வையாளர்கள் நியூட்டன், சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News