நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆகாஷ் வழங்கிய காட்சி.
தென்காசி மாவட்டத்தில் ரூ.6.50 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்-கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்
- தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
- விவசாயக் கண்காட்சியை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தொடங்கி வைத்தார்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் வாசுதேவநல்லூர் மற்றும் குருவிகுளம் வட்டார வேளாண்மை துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயக் கண்காட்சியை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தொடங்கி வைத்தார்.
தென்காசி மாவட்டத்தில் இதுவரை சாகுபடி செய்யப்பட்ட நெல் 4663 ஹெக்டேர், சிறுதானியங்கள் 3001 ஹெக்டேர், பயறு வகைகள் 1338 ஹெக்டேர், பருத்தி 962 ஹெக்டேர், கரும்பு 1436 ஹெக்டேர், எண்ணெய் வித்து 1183ஹெக்டேர் பரப்பும் ஒத்திசைவு செய்யப்பட்டது.
மழை அளவு நீர் இருப்பு விபரம் மற்றும் இடுபொருட்கள் இருப்பு விபரம் அனைத்து விவசாயிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் பாரத பிரதமரின் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கும், திட்ட மானிய தொகை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்பில் ஒரு பயனாளிக்கும் பவர்டிரில்லர் என மொத்தம் 19 பயனாளிகளுக்கு ரூ. 6 லட்சத்து 47,370 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், வேளாண்மை இணை இயக்குனர் தமிழ் மலர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை பொறுப்பு கனகம்மாள், தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி, வேளாண்மை துணை இயக்குனர்,வேளாண் விற்பனை மற்றும் வணிகம் கிருஷ்ணகுமார், உதவி செயற்பொறியாளர் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.