உள்ளூர் செய்திகள்

கோவையில் 1,467 கிராம் தங்க கட்டிகள் மோசடி- சூப்பர்வைசர் மீது வழக்கு

Published On 2022-08-07 09:52 GMT   |   Update On 2022-08-07 09:52 GMT
  • தனியார் தங்க நகை தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
  • நகைகளின் தரம் மற்றும் ட்ரேட் மார்க் பணிகளையும் செய்து வந்தார்.

கோவை 

கோவை சலீவன் வீதியில் தனியார் தங்க நகை தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் கோவை வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ்(34)என்பவர் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார். இந்த நிறுவனத்தில் இருந்து நகை தயாரிப்பாள ர்களுக்கு தங்கக் கட்டிகளை கொடுத்து பின்னர் அவற்றை நகைகளாக வாங்கி முத்திரை வைக்கும் பணிகளை ஜெகதீஷ் செய்து வந்தார். மேலும் நகைகளின் தரம் மற்றும் ட்ரேட் மார்க் பணிகளையும் செய்து வந்தார்.

சம்பவத்தன்று நிறுவனத்தின் கணக்குகளை மேலாளர் கார்த்திகேயன் சரிபார்த்தார். அப்போது கடந்த 6 மாதத்தில் கணக்கு வழக்குகளில் திருத்தம் செய்தும் கம்ப்யூட்டரில் உள்ள பதிவுகளில் மாற்றம் செய்தும் ரூ.55 லட்சம் மதிப்பிலான 1467 கிராம் தங்க கட்டிகளை ஜெகதீஷ் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கார்த்திகேயன் வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ஜெகதீஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News