உள்ளூர் செய்திகள்

சாலையில் கொட்டிக் கிடக்கும் நிலக்கரி.

லாரி கவிழ்ந்ததால் சாலையில் கொட்டிய நிலக்கரி

Published On 2022-08-10 10:22 GMT   |   Update On 2022-08-10 10:22 GMT
  • லாரியில் இருந்த நிலக்கரி சாலையில் கொட்டியதில் டிரைவருக்கு காயம் ஏற்பட்டது.
  • சாலையில் லாரி கவிழ்ந்து நிலக்கரி கொட்டி மலைபோல் குவிந்து கிடந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தஞ்சாவூர்:

தஞ்சை- திருச்சி சாலையில் நேற்று மதியம் ஒரு லாரி நிலக்கரி ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தது. லாரியை திண்டுக்கல்லை சேர்ந்த டிரைவர் மோகனசுந்தர் (வயது 47) ஓட்டிச்சென்றார்.

லாரி தஞ்சை புதிய கலெக்டர் அலுவலகம் அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாடடை இழந்து சாலையிலேயே கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த நிலக்கரி சாலையில் கொட்டியது. மேலும் லாரி கவிழ்ந்ததில் டிரைவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் மயக்க நிலையில் இருந்தார்.இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த மோகனசுந்தரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சாலையில் லாரி கவிழ்ந்து நிலக்கரி கொட்டி மலைபோல் குவிந்து கிடந்ததால் அந்த பகுதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து போக்கு வரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. பின்னர் கவிழ்ந்த லாரி அப்புறப்படுத்த ப்பட்டதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. இந்த விபத்து குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News