உள்ளூர் செய்திகள்

கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கம் சார்பில் இணை பதிவாளரிடம் மனு

Published On 2023-09-26 16:10 IST   |   Update On 2023-09-26 16:10:00 IST
  • தருமபுரியில் கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கம் சார்பில் இணை பதிவாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
  • 3ந்தேதி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் தருமபுரி மாவட்ட கிளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;

தருமபுரி மாவட்டத்தில் 133 தொடக்க வேளாண்மை சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம், விவசாய உள் கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் விருப்பமுள்ள கூட்டுறவு சங்கங்களில் மட்டுமே இத்திட்டத்தை செயல்படுத்த முடியும் என கூட்டுறவுத்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது நலிவடைந்து நட்டத்தில் இயங்கும் சங்கங்களுக்கு விவசாய உபகரணங்கள் மற்றும் லாரி, டெம்போ போன்ற வாகனங்கள் வாங்க நிர்பந்தி க்கப்படுகிறது. இதனால் சங்கங்கள் மேலும் நட்டத்துக்கு உள்ளாகி நிதி நிலை மேலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகாரிகள் உபகர ணங்கள் வாங்க கட்டா யப்படுத்துவதை கைவிடக் கோரி இன்று தருமபுரி இணை பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டது. இதே போல் தமிழ்தாடு முழுவதும் அனைத்து மண்டல பதிவா ளர்களுக்கும் கோரிக்கை மனு டாக்பியா தொழி ற்சங்கம் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தொடக்க வேளாண்மை பணியா ளர்கள் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.

இதில் டாக்பியா மாவட்ட செயலாளர் வி. கே. நரசிம்மன், தலைவர் அசோகன் ஆகியோர் தலைமையிலும் பொருளார் ஸ்டாலின் மணிக்குமார், துணைத்த லைவர் துரை ராஜ், துணைத்த லைவர் வினாயகம், இணைச்செ யலாளர் உஷாராணி, மாநில, மாவட்ட இணைச்செயலாளர் செந்தி ல்குமார் ஆகியோர் முன்னி லையிலும் மனு அளிக்கப்பட்டது. இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் வரும் அக்டோபர் 3ந்தேதி ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

Similar News