உள்ளூர் செய்திகள்

தூய்மை பணியில் ஈடுபட்ட மாணவர்கள்.

மனோரா கடற்கரையில் தூய்மை பணி

Published On 2023-11-26 10:11 GMT   |   Update On 2023-11-26 10:11 GMT
  • கடற்கரையில் கிடந்த பிளாஸ்டிக்குகள் எடுத்து அப்புறப்படுத்தி தூய்மை பணி மேற்கொண்டனர்.
  • பேராவூரணி தேசிய மாணவர் படை அலுவலர் சத்தியநாதன் மாணவர்களை வழிநடத்தினார்.

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள் பொதுமக்களிடம் நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி மனோரா சுற்றுலா தல கடற்கரையில் படகு நிறுத்தும் இடத்தில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் கடற்கரையில் கிடந்த நெகிழிப் பைகள், ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி வீசப்பட்ட கப்புகள், மணலில் புதைந்து கிடக்கும் பொருட்களை கண்டுபிடித்து எடுத்து அப்புறப்படுத்தி தூய்மை பணி மேற்கொண்டனர்.

முன்னதாக காரைக்குடி 9 வது பட்டாலியன் மகேஷ் நீர்நிலைகளை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து மாணவர்களிடம் விளக்கி கூறினார். பேராவூரணி தேசிய மாணவர் படை அலுவலர் சத்தியநாதன் மாணவர்களை வழிநடத்தினார்.

நிகழ்ச்சியில் சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார், சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னா, துணை தலைவர் மாசிலாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News