உள்ளூர் செய்திகள்

சென்றாய வரதராஜா பெருமாள் கோவிலை படத்தில் காணலாம்.

பென்னாகரம் அருகே பரபரப்பு கோவிலில் புரட்டாசி மாத பூஜை செய்வதில் இருதரப்பினரிடையே வாக்குவாதம்

Published On 2023-10-02 15:14 IST   |   Update On 2023-10-02 15:14:00 IST
  • கோவில் பூஜைகள், சாமி ஊர்வலம் பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வந்தது.
  • இருதரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் செய்ததாக கூறப்படுகிறது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள அரங்காபுரம் கிராமத்தில் பல்வேறு சமூகத்தை சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இக்கிராமத்தில் சுமார் 100 ஆண்டு கால பழைமை வாய்ந்த ஸ்ரீ சென்றாய வரதாரஜா பெருமாள் கோவில் அரசு நடுநிலை பள்ளி அருகே அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்த கோவில் பூஜைகள், சாமி ஊர்வலம் பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வந்தது. மேலும் பழமை வாய்ந்த கோவில் என்பதாலும், போதிய பராமரிப்பின்றியும் பாழடைந்து போனது.மேலும் இக்கோவில் பள்ளி கூட வளாகத்தில் உள்ளதாலும் இடவசதி உள்ளிட்ட காரணங்களால் ஒரு சில சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து பணம் வசூல் செய்து அதே கிராமத்தில் பள்ளிகூடம் அருகில் உள்ள நிலத்தில் புதியதாக சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ சென்றாய வரதாரஜா பெருமாள் கோவிலை கட்டி முடித்தனர்.

இந்நிலையில் வருடாந்திர புரட்டாசி மாத பூஜைக்காக காலகாலமாக பின்பற்றும் நடைமுறைப்படி ஊர்வலம் எடுத்து செல்ல திட்டமிட்டனர். ஆனால் இதுசம்மந்தமாக மற்றொரு தரப்பினர் கூடுதல் இடங்களுக்கு சாமி ஊர்வலம் வரவேண்டும் என கூறியதாக தெரிகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த பென்னாகரம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகாலட்சுமி, இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வம் உள்ளிட்ட போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அக்கிராமத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

Tags:    

Similar News