உள்ளூர் செய்திகள்
கோவிலின் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி
- சிங்காரவேலவர் வள்ளி- தெய்வானையுடன் வலம் வரும் நிகழ்வு நடந்தது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிக்கல் சிங்கார வேலவர் ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு மகா தீபம் ஏற்றும் விழா நடைபெற்றது.
சிங்காரவேலவருக்கு பதினாறு வகையான திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் தீபாரா தனையும் நடைபெற்றது.
ஆலய உட்பிரகாரத்தில் சிங்காரவேலவர் வள்ளி-தெய்வானையுடனும், தியாகராஜர், பெருமாள் உட்பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கோவில் வாசலில் சொக்கபனை தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.