உள்ளூர் செய்திகள்

கொடைக்கானல் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.

போக்குவரத்து நெரிசலால் திணறும் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

Published On 2023-05-14 12:19 IST   |   Update On 2023-05-14 12:19:00 IST
  • தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் நகர் பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு ள்ளது.
  • வாகன போக்குவரத்து குறைவாக காணப்படும் மேல்மலை கிராமங்களில் வனப்பகுதியில் தங்க அதிக அளவில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கொடைக்கானல்:

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் மீண்டும் அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு மலை ஸ்தலங்க ளுக்கு படைெயடுத்து வருகின்றனர். கோடை விடுமுறையை கொண்டாட குடும்பத்துடன் பயணித்து வருகின்றனர்.

மலைகளின் இளவரசி யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. வருகிற 26-ந் தேதி கோடை விழா மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இதனால் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றில் நடப்பட்ட மலர் செடிகளில் பூக்கள் புத்துக் குலுங்கு கின்றன. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் நகர் பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு ள்ளது.

ஏரிச்சாலை பஸ் நிலையம், மூஞ்சிக்கல் உள்பட நகரின் முக்கிய இடங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையே காணப்பட்டது. இதனால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மேல்மலை கிராமங்களுக்கு படை யெடுக்கத் தொடங்கினர். இயற்கை எழில் சூழ்ந்த நிலையில் காணப்படும் புல்வெளிகளில் உற்சாகமாக நடைபயிற்சி சென்று மகிழ்ந்தனர்.

மேலும் மன்னவனூர் சூழல் சுற்றுலா பூங்காவில் குதிரை சவாரி அனை வரையும் கவர்ந்தது. ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து வருகின்றனர். வாகன போக்குவரத்து குறைவாக காணப்படும் மேல்மலை கிராமங்களில் வனப்பகுதியில் தங்க அதிக அளவில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் பூம்பாறை, மன்னவனூர், கிளாவரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள் நிரம்பியுள்ளன. சுற்றுலா பயணிகள் வருகையால் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News